திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே, ஏரியில், நடராஜர் வெண்கல சிலை கண்டு எடுக்கப்பட்டது …
1 min read

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே சிருங்காவூர் ஏரியில், அப்பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் வீசிய தூண்டிலில் ஏதோ மீன் பெரியதாக மாட்டி வெளியே வராத நிலையில் இருந்ததால், குழம்பி போன அவர்கள், ஏரியில் இறங்கி பார்த்த போது, ஒரு பையில் மூடப்பட்ட நிலையில் முலாம் பூசப்பட்ட நடராஜர் சிலை இருப்பது தெரிய வந்தது, உடனே இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், நடராஜர் சிலை செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த சிலை, எந்த கோவிலிலாவது திருடப்பட்டு, பையில் போட்டு கொண்டு வந்த போது, காவல்துறையினருக்கு பயந்து ஏரியில் இதனை யாரும் வீசி சென்றார்களா, என்ற கோணத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் ” சுமார் 2 அடி உயரமுள்ள அந்த நடராஜர் வெண்கல சிலையை, செங்குன்றம் போலிசார், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.”
செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
