Sat. Sep 26th, 2020

கொரோனா பரவல் தடுப்பு குறித்து, மாணவ-மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்துரையாடல்…

1 min read

செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் அமைந்துள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்கொரோனா பரவல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் ஆன்லைனில் நடந்தது. அதில், மாணவர் மன்றத்தினர், காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் தரப்பில் கலந்து கொண்டனர்.
கொரோனா காலத்தில் மாணவ-மாணவிகள் வெளியில் செல்ல கூடிய நிலையில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும், கொரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்வது குறித்தும், மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து, ஆலோசனைகள் வழங்கபட்டது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, புழல் சரக உதவி ஆணையர் ராம. ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். எலைட் பள்ளியின் துணை முதல்வர் பிரமோத் வரவேற்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல் வடக்கு மண்டல இணை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன், மருத்துவர்கள் மற்றும் மாணவ, மாணிகள் கலந்துரையாடினர். இறுதியாக,
மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் என்.எம். சேரன் நன்றி கூறினார்.

செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *