Sat. Sep 26th, 2020

திருவள்ளூர் மாவட்டத்தில், மக்கள் பொது போக்குரத்தை பயன்படுத்த அச்சமா…

1 min read

கொரோனா தொற்று பரவல் துவங்கிய உடன் மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்தன. அதனால் ரயில் போக்குவரத்தும் பேருந்து போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கபட்டன.இந்நிலையில், 116 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து தடை நீக்கபட்டதை தொடர்ந்து பேருந்துகள், திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட தாலுகாவில் இயங்க துவங்கின.
பேருந்துகளில் நடத்துநர் சீட்டின் அருகே சானிட்டர், மற்றும் காய்ச்சல் உள்ளதா எனும் பரிசோதனை செய்யும் வெப்பமானி இயந்திரம் மற்றும் சமூக இடைவெளியோடு மக்கள் பயணம் செய்ய அரசு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. ஆனால் அனைத்து ஊர்களிலும் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

குறிப்பாக, பொன்னேரி பணிமனையில் 58 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது பொன்னேரி- செங்குன்றம் இடையே இரண்டு பேருந்தும், பொன்னேரி – பழவேற்காடு இடையே இரண்டு பேருந்துகள் என, நான்கு பேருந்துகள் மட்டுமே இயக்கபடுகின்றன.

அதே போல் ஊத்துகோட்டை பனிமனையிலும் குறிப்பிட்ட தடங்களில் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. அதில் சமூக இடைவேளியுடன் பயணிகள் பயணித்தனர். முன்பாக பயனிகளுக்கு சானிடர் கொடுத்து கைகளை செய்யபட்ட பின்னர் முககவத்தம் அணிந்தவர்களை மட்டுமே பஸில் பயணிக்க நடத்துனர் அனுமதித்தார்.

செய்திகள் – மகேஷ் – அபுபக்கர் – சீனிவாசன்

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *