Fri. Sep 25th, 2020

நாரவாரிகுப்பம் பேரூராட்சியில்,சிறப்பு மருத்துவ முகாம், பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா துவக்கி வைத்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் (செங்குன்றம்)உள்ள 18 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டதையடுத்து செங்குன்றம் ஜிஎஸ்டி சாலை அருகே சிறப்பு மருத்துவ முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் கோ. சதீஷ் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப சுகாதார முதன்மை மருத்துவரும் ஜோஸ்பின் முன்னிலை வகித்தார்

மருத்துவ முகாமை பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா துவக்கி வைத்தார். இதில், பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றிற்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் நோய் தடுப்பு மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் புழல் வருவாய் ஆய்வாளர் ஜெயகர்பிரபு சுகாதார ஆய்வாளர் மதியழகன் கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *