Sat. Sep 26th, 2020

பழவேற்காட்டில், புயல், வெள்ளம் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. வட மேற்கு மண்டல துணை இயக்குனர் சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சியில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய உள்ள நிலையில், புயல் மற்றும் பெரு மழையால் ஏற்படும் பேரிடர் சூழலில் அதில், சிக்கி தவிக்க கூடிய பொது மக்களை மீட்பது குறித்து தீயணைப்பு பணியாளர்கள் ஒத்திகை செய்து காண்பித்தார்கள்.

குறிப்பாக, ரப்பர் படகு மூலம் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துவிட்டால் தண்ணீரில் மூழ்கிய நபர்களை மீட்பது, கயிறுகள், லைப்பாய், லைப் ஜாக்கெட், டைவிங் சூட் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி மனித உயிர்களை காப்பாற்றுவது எப்படி என்றும், மற்றும் பொதுமக்களின் இருப்பிடத்தில் உள்ள எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களின் உயிர்களையும் காப்பாற்றுவது குறித்த பல்வேறு மீட்பு பயிற்சி மற்றும் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி ஒத்திகையில் திருவள்ளூர் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், திருவண்ணாமலை மாவட்ட அலுவலர் முரளி, காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர் குமார், வேலூர் மாவட்ட அலுவலர் லஷ்மி நாராயணன் உள்ளிட்ட 20 கமாண்டோ வீரர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியை மீனவ கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும், மீனவர்களும் பார்வையிட்டனர்…

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *