Mon. Sep 28th, 2020

பொன்னேரியில், விவசாயிகள் சங்கத்தினர், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி அருள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொன்னேரி ஜிவா கலந்து கொண்டு கண்டன உரயாற்றினார்.

விவசாயிகளை பாதிக்கும் வகையில் தொடர்சியாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் சட்ட திருத்தங்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மின்சார சட்ட திருத்த மசோதாவால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டினர். விவசாயிகள் மட்டுமல்லாது ஏழை மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் 100யூனிட் இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படும் என்பதால் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதாவால் உணவுப் பொருட்கள் பதுக்கல் அதிகரித்து விலை பன்மடங்கு உயரும் ஆபத்து உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ச்சியாக விவசாயிகள் பாதிக்கும் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள சட்ட திருத்தங்களை மத்திய அரசு கைவிட வேண்டும், எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *