செங்குன்றத்தில் ஸ்ரீனிவாசா ஏஜென்ஸிஸ் 52ம் ஆண்டு தொடக்க விழா, கொரோனா விழிப்பு உணர்வு நிகழ்ச்சி…
1 min read

செங்குன்றம் தண்டல்கழனியில் அமைந்துள்ள இந்தியன் ஆயிலின் முகவரான, ஸ்ரீனிவாஸ் ஏஜென்ஸீஸ் உரிமையாளர் பி.சத்தியநாராயணன் புதல்வர்கள் எஸ்.ஸ்ரீனிவாசன், எஸ்.ரமேஷ், எஸ்.பாலாஜி ஆகியோர்களின் பெட்ரோல் பங்கின் 52 ஆம் ஆண்டு விழா, பங்க் வளாகத்தில் சமூக இடைவெளியோடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் ஆளுநர் டி.துளசிங்கம், இரண்டாம் துணை ஆளுநர் பி.வி. ரவீந்திரன், மாவட்டத் தலைவர் இரா.ஏ.பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு காலை, மதிய உணவும், பொதுமக்கள் 500 பேருக்கு கபசுரக் குடிநீர், சுண்டலும், 2000 பேருக்கு முகக் கவசம் உள்ளிட்டவைகளை வழங்கி கொரோனா தொற்றுவிலிருந்து காப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.

சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் எம்.பொன்னையன், செயலாளர் டி.பவானி சங்கர், பொருளாளர் கே.பாஸ்கர் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777