செங்குன்றம் ஓட்டோ ஷோரூம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கொரோனா விழிப்பு உணர்வு நிகழ்ச்சி…
1 min read

செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் அமைந்துள்ள ஓட்டோ ஷோரூமின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொரோனா விழிப்பு உணர்வு நிகழ்ச்சி செங்குன்றம் ஓட்டோ நிறுவனத்தின் உரிமையாளரும் பாரதி மொபைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான மோகனசுந்தரம் தலைமையில் அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியோடு நடைபெற்றது. செங்குன்றம் பாரதி மொபைல்ஸ் மேனேஜர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார்.

செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், செங்குன்றம் குறுவட்ட வருவாய் அலுவலர் ஜெய்கர் பிரபு, செங்குன்றம் பேரூராட்சி தூய்மை ஆய்வாளர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன், சென்னை நண்பன் இதழ் ஆசிரியர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்,
20 தூய்மை பணியாளர்களை கெளரவித்து நலத்திட்ட உதவிகளையும், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
இதில் ஓட்டோ ஷோரூம் ஊழியர்கள், பாரதி மொபைல்ஸ் ஊழியர்கள், பொதுமக்கள் சமூக இடைவெளியோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
