Sat. Sep 26th, 2020

திருவள்ளுர் மாவட்டத்தில் கல்வி கட்டணம் 100% வசூலித்தால் நடவடிக்கை, முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில், “தனியார் பள்ளிகள் 100 சதவிகிதம் கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் பெற்றோர்கள் இணையதளத்தில் புகார்களை தெரிவிக்கலாம் ” என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், ” மழலையர், நர்சரி, மற்றும் மெட்ரிக் தனியார் பள்ளிகளில் 100 சதவிகிதம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும்” என மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. என்றும் இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
” திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மழலையர் மற்றும் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளில் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் கீழ் 2020 – 2021 கல்வியாண்டில் 100 சதவிகித கல்வி கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தினால் பள்ளி மீதான புகார்களை matriccomplaintceotlr@gmail.com என்ற இணையதளம் வாயிலாக புகார் அளித்தால் அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *