Sat. Sep 26th, 2020

ஆவடி மாநகரின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்டுவரும் அமைச்சர் பாண்டியராஜன்…

1 min read

முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் சீரிய சிந்தனையில்,
” டைடல் பார்க் கட்டிடங்களிலேயே அதிகபட்சமாக 21 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடமாக, 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பட்டாபிராம் டைடல் பார்க் கட்டிடம் திகழ்ந்து வரும் நிலையில்,
இந்த கட்டிடம் ஒரு ஸ்மார்ட் பில்டிங்’காக உருவாக்கப்பட்டு வருவது, அதிமுக அரசின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது ” என, பட்டாபிராம் பகுதியில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் பணியினை ஆய்வு செய்த,
அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் அவர்கள் கூறி, பெருமிதம்பட்டார்.

ஆவடி அரசு பொது மருத்துவமனையில் உயிர்காக்கும் 108 அவசரகால ஊர்தி சேவைக்காக, உயர்தர உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 2 அவசரகால ஊர்திகளை, அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து, கருவிகளின் சிறப்பு குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின் போது, ஆவடி மாநகர கழகச் செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் அவர்கள், ஆவடி மாநகராட்சி ஆணையர்
நாராயணன் அவர்கள், ஆவடி வட்டாட்சியர்
சங்கிலிரதி அவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *