Mon. Sep 28th, 2020

108 ஆம்புலன்ஸ் சேவையை, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் துவக்கி வைத்தார்…

1 min read

தமிழக முதல்வர் அவர்களால் 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் காட்டூர் ஆரம்ப கூடுதல் சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம்,பி.பலராமன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனால் இதனை சுற்றியுள்ள கிராமங்கள் அவசர உதவி அளிக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும், மீஞ்சூர் வட்டார மருத்துவ தலைமை அலுவலர் ராஜேஷ் மற்றும் காட்டூர் ஆரம்ப கூடுதல் சுகாதார நிலைய மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள், முன்னிலையிலும் இந் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின், மீஞ்சூரில் காலதாமதமாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலத்தை சட்டமன்ற உறுப்பினர், சிறுனியம் பலாராமன் அவர்கள் பார்வையிட்டு, அதிகாரிகளை சந்தித்து பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து விசாரித்தார். பணிகளை மிக விரைவாக முடிக்கும் படி, கேட்டுக்கொண்டார். மேலும் அவருடன், உள்ளாட்சி பிரதிநிதிகள், காட்டூர் ஒன்றிய கவுன்சிலர் நந்தினி, தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் பி.டி.பானூபிரசாத், கே ஏ மோகனவடிவேல், உபயதுல்லா, ஜி.எஸ் வினோத், ரூரல்வங்கி தலைவர் செல்வகுமார், வேலு மயில், காணியம்பாக்கம் சம்பத், காட்டூர் ஆனந்தன், ஏ.டி. அமிர்தலிங்கம், மீஞ்சூர் கூட்டுறவு சங்க தலைவர் எம் வி எஸ் தமிழரசன், வழக்கறிஞர்கள் எம்.மாரி,
த.இளையராஜா, ஜே வாசு. வெற்றி என்ற ராமமூர்த்தி, சலீம், துர்கா பிரசாத், வேலூர் சம்பத், கத்தி குத்து கந்தன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அதன் பின், மீஞ்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர். அப்போது பத்திரிகையாளரும், மீஞ்சூர் பகுதி சமூக நல ஆர்வலருமான, அபுபக்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர், பலராமன் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை வழக்கினார்.

அதில், “மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் , கர்பிணிகள், முதியோர் பயனடையும் வகையில் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு ” கோரிக்கை வத்திருந்தார். அதற்க்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர்,
“இந்த வசதிகள் கூடிய விரைவில் செய்து தரப்படும் ” என உறுதியளித்து சென்றார்.

செய்தியாளர் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *