Mon. Sep 28th, 2020

பொன்னேரியில், “கற்கை நன்று கிராமக்கல்வி அறக்கட்டளை” சார்பில், கல்வி சீர் வழங்கும் விழா…

1 min read

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள் அதிகம் உள்ள கிராம பகுதிகளான, பழவேற்காடு, திருபாலைவனம், வஞ்சிவாக்கம், மெதுர், போன்ற பகுதியில் படிக்கும் ஏழை, எளிய பள்ளி பிள்ளைகளுக்கு, படிப்பை எந்த தடையும் இல்லாமல் தொடர உதவும் வகையில், அதே பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், வடிவேல், நவீன்குமார், கார்த்திக், அருண்குமார், கிஷோர்குமார், உமாசங்கர், ஆகியோர் ஒன்றினைந்து, “கற்கை நன்று கிராம அறக்கட்டளை” என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம், ஏழை- எளிய மாணவ,மாணவிகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த அமைப்பின் மூலம் இளைஞர்கள், கிராம ஏழை மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு,புத்தகம் உட்பட உபகரணங்கள் வழங்கியும், மாலை நேரத்தில் வகுப்புகள் நடத்தியும், அவர்கள் அதிக மதிப்பெண் பெற வழிவகை செய்கின்றனர். அப்படி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள், கைகடிகாரம் உட்பட பரிசுகளும் வழங்கி மேலும் நன்றாக படிக்க ஊக்குவிக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் தற்போது, பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் கட்ட வசதியில்லா மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உதவும் வகையில், கல்வி கட்டணத்தையும் வழங்கி உதவி உள்ளனர்.

கல்வி கட்டணங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் விதமாக, கல்வி சீர் வழங்கும் விழாவாக நடத்தினர். இந் நிகழ்ச்சியில், சன் குழுமத்தின் உயர் நிர்வாகி ஜானகிராஜன் அவர்களும், சின்னம்மையார் வள்ளலார் அறக்கட்டளையின் நிர்வாகி ரவி அவர்களும், ஆதி தமிழர் விடுதலை இயக்க நிர்வாகி இளஞ்செழியன் அவர்களும், மெதூர் சமூக சேவகர் சேகர் அவர்களும், மெதூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் அமிர்த்தராஜ் அவர்களும், வஞ்சிவாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் ராஜேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து, 9 ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகைகளையும், கல்வி உபகரணங்களையும் வழங்கியதுடன், அவர்களுக்கு கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியதுவத்தை எடுத்து கூறி, அவர்கள் தொடர்ந்து படிப்பில் பல வெற்றிகள் பெற வழி முறைகளையும் எடுத்துரைத்தனர்.

செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *