செங்குன்றம், புழல் ஏரிகரைகளில், சமூக பணிக் குழு நண்பர்கள் சார்பாக, மரம் நடும் விழா…
1 min read

செங்குன்றம் புழல் ஏரிகரைகளை சுற்றி மரம் நடவேண்டி, தொடங்கவிழா நிகழ்ச்சியை, கடந்த பிப்ரவரி மாதம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆலமரம் பகுதியில் மரம் நட்டு வைத்து துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் (300க்கும் மேற்பட்ட) மரங்களை சமூக பணிக்குழு நண்பர்கள் குழு (SWOTT) நட்டு வைத்தும், பராமரித்தும் வருகின்றது.

நேற்று நடந்த மரம் நடும் நிகழ்வில் ,பாடியநல்லூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி நடராஜன், வார்டு உறுப்பினர்கள் என்.வேலு, பி.சுரேஷ், கே.வளர்மதி, வி.வசந்தி, கே.ராஜேஷ், டி.ஆர். வாணி, கே.ராஜவேலு ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்.
இதில் சமூக பணிக்குழு நண்பர்கள் குழு தலைவர் பாலாஜி, சமீர், சென்னை நண்பன் இதழ் ஆசிரியர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் உள்ளிட்ட குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான ஒன்றிய பெருந்தலைவர்கள், துணைப் பெருந்தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து மரங்களை நட்டு வைத்து பராமரிக்க உள்ளனர்.
செய்திகள் – நண்பன் எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
