பாடியநல்லூர் முதல் நிலை ஊராட்சி சார்பாக கொரோனா பரிசோதனை முகாம்…
1 min read

சோழவரம் ஒன்றியம்,
பாடியநல்லூர் முதல் நிலை ஊராட்சி சார்பாக, கொரோனா பரிசோதனை முகாம், மற்றும் பொது மருத்துவ முகாம் பவானி நகர், கரிகாலன் நகர், ஜோதி நகரில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி செயலர் கே.ஆர். சுரேஷ்குமார், வார்டு உறுப்பினர்கள் கே.ராஜவேலு, பி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொரோனா நோய்த் தொற்று தடுப்பு சிறப்பு வட்டாட்சியர் சுமதி, சோழவரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் குலசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுதா மோகன் குழுவினர் சார்பாக காய்ச்சல், சளி உள்ளிட்டவைகளுக்கு மாத்திரைகள் வழங்கி பரிசோதனை செய்தனர்.
இதில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், பவானி நகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்பு குழு தலைவர் எஸ்.ஜோசப், செயலாளர் பி.என்.கே. கிருஷ்ணன், துணைச் செயலாளர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், உறுப்பினர் அப்துல் வகாப், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் – நண்பன், எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777