Sat. Sep 26th, 2020

திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில், சா.மு.நாசர் கண்டன உரை…

1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின் படி, தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களையும் பெற்றோர்களையும் மனஉளைச்சளுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன்- ஏற்பாட்டில், திருவேற்காடு வேலப்பன்சாவடியில், மாவட்ட கழக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் கருப்பு கொடி மற்றும் நீட் எதிர்ப்பு மற்றும் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தும் வாசகங்கள் தாங்கிய பதாகைகள் ஏந்தியும், கண்டன உரையாற்றினார். உடன் நகர செயலாளர் என்.இ.கே.மூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜி.நாராயண பிரசாத், நிர்வாகிகள், சாது, பா.பன்னீர் செல்வம், என்.சி.அரசு, செல்லதுரை, எஸ்.சங்கர், பிரியன்குமார் உள்பட இளைஞரணி மாணவரணி மற்றும் நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *