Fri. Sep 25th, 2020

நான், விளம்பரம் தேட நடிகன் அல்ல, விவசாயி ; திருவள்ளுரில், முதல்வர் பேச்சு…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.பின்னர், விவசாயிகள், தொழில் முனைவோர், சுய உதவி குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார்.முன்னதாக 7258 பயனாளிகளுக்கு ₹51.68 கோடியில் நலத்திட்ட உதவிகளையும், 12 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 21 முடிவுற்ற திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்றும், தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சென்னைக்கு அருகே உள்ள மாவட்டம் என்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது எனக்கூறிய முதல்வர், காய்ச்சல் சிறப்பு முகாம் பல்வேறு நடவடிக்கைகளால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது என்றும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 39500 நபர்கள் ஊரடங்கு காலத்தில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும்,
திருவள்ளூர் மாவட்டத்தில் 2020 – 21 ஆம் ஆண்டில் 82% குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால் ஏரிகளில் 50%நீர் நிரம்பி உள்ளது என்றும், புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் 30.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.
கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது எனவும், ஓரிரு வாரங்களில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது எனவும் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் 386கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.எனவும், மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாக்காமல் விவசாய பணிகளுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கடந்த 3ஆண்டுகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது எனவும், மத்திய அரசு அதிக சலுகைகள் அளித்ததால், அதை தவறாக சிலர் பயன்படுத்தி உள்ளனர் எனவும், கிசான் திட்டத்தில் தவறு நடைபெற்ற இடங்களில் குழு அமைத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 230.97 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த முதல்வர், பூண்டி கிருஷ்ணா கால்வாய் சீரமைக்க ₹25 கோடியும், திருகண்டலம் பகுதியில் உடைந்த தடுப்பணையை சீரமைக்க ₹4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.அரசு எடுக்கும் நடவடிக்கைகளை சிலர் விளம்பரம் செய்வதாக கூறுவதாகவும், விளம்பரம் தேட தான் நடிகனல்ல என்றும், விவசாயி என்றும் தெரிவித்தார்.

செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *