பூந்தமல்லி நகர திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ கண்டன உரை…
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சளுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில், பூவிருந்தவல்லி நகர திமுக சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினார். உடன் நகர கழக செயலாளர் எம்.ரவிக்குமார் உள்பட கழக நிர்வாகிகள்
உடன் இருந்தனர்.
செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777
