மாதவரத்தில், சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணியினர் ஆர்பாட்டதில், சுதர்சனம் எம்.எல்.ஏ கண்டன உரை…
1 min read

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, சென்னை வடக்கு மாவட்டம் இளைஞரணி மாணவரணி சார்பில், சென்னை வடக்குமாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான, மாதவரம் சுதர்சனம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாதவரம் மண்டல அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில், மாதவரம் பகுதி செயலாளர் துக்காராம், பரந்தாமன் இளைஞரணி மற்றும் மாணவர் அணியினர் உட்பட கழக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதவரம் செய்தியாளர்- ரஞ்சித்
நிழல்.இன் -8939476777
