சோழவரம் அலமாதியில், தேமுதிகவினர் நிவாரண உதவி வழங்கினர்…
1 min read

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சோழவரம் தெற்கு ஒன்றியம் அலமாதி ஊராட்சியில், பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம் தலைமையில் அலமாதி என். குமார் ஜி.சீனிவாசன் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எம் டில்லி அவர்கள் 500 ஏழை, எளியோருக்கு பிரியாணி பொட்டலங்களைையும், நிவாரணங்களையும் வழங்கினார்.

மேலும், அதனைத் தொடர்ந்து 200 ஏழைத் தாய்மார்களுக்கு புடவைகளும், தூய்மைப் பணியாளர்கள் 50 பேருக்கு அரிசி, புடவை, மதிய உணவு உள்ளிட்ட நிவாரணங்களையும் மாவட்ட செயலாளர் கே.எம். டில்லி வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி.பாபுராவ் மாவட்ட பொருளாளர் எஸ்பிடி மூ.ராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர் எஸ்.பி ரமேஷ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் வி.எம் முருகன் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் வி.எல் பாபு கேப்டன் மன்ற துணை செயலாளர் ஆர்.சிங்காரம் மாணவர் அணி துணைச் செயலாளர்கள் எம். நரேந்திர பாபு ஆர். கண்ணன் தொண்டரணி செயலாளர் எம். எஸ் உமாபதி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஏ. வெங்கட் மற்றும் சோழவரம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் அலமாதி ஊராட்சி கிளை கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.
மாதவரம், செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777
