Sat. Sep 26th, 2020

சோழவரம் புதுகுப்பத்தில், கூட்டுறவு சங்க புதிய கட்டிடங்கள் திறப்பு விழா…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் அடங்கிய, புதுக்குப்பம் கிராமத்தில் கூட்டுறவு கடன் சங்கத்திற்க்கு புதிய கட்டிடம் 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்டது. அதே போன்று அருகில் உரக்கிடங்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படது. அந்த இரண்டு கட்டிடங்களுக்கும் இன்று திறப்பி விழா நடத்தப்பட்டது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம்.பி.பலராமன் எம்எல்ஏ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் அதிமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவருமான,
பி. கார்மேகம் முன்னிலை வகித்தார். மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் முனிநாதன்,
துணைத் தலைவர் திருமலை, இயக்குனர்கள், கேசவன், மணி, வெங்கடேஷ் பாபு, குருமூர்த்தி, பானு, சுமதி, உமாபதி, ஆலையமணி, அய்யம்மாள், மற்றும் வங்கியின் செயலாளர் விஜயா உள்ளிட்டோர் பங்கு கொண்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர்கள் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *