புழல் பகுதியில், சமூக பணிக்குழு சார்பாக 500 மரங்கள் நடும் விழா…
1 min read

சென்னை புழல் கவாங்கரை பகுதியில் உள்ள தாமரைக்குளம் கண்ணப்ப சாமி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை பூங்காவாக மாற்ற சமூகப் பணிக் குழு அறக்கட்டளை சார்பாக, 500 மரக்கன்றுகள் நடும் விழா மாதவரம் மண்டலம் 3 மண்டல அலுவலர் எச்.முருகன் முதல் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார். அவருடன் பார்க் பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர் சீனிவாசன்,
பொது பணித்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் இணைந்து புழல் லயன்ஸ் மனித நேய சங்க தலைவர் ராஜா, சமூக பணிக்குழு (SWOTT) தலைவர் G.பாலாஜி, செயலாளர் சமீர், பொருளாளர் தமிமுன் அன்சாரி, இணைச் செயலாளர் முத்து கிருஷ்ணன்,
துணை செயலாளர் கருணாநிதி மற்றும் SWOTT நிர்வாகிகள் பன்னீர், டிங்கர்பாலு
வினோத், கார்த்திக், நந்தா, ரமேஷ், விஷ்வா தாவூத், ராபர்ட், சையது, ராஜ்குமார், அலி, மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு மரம் நடவு செய்தனர்.

நிகழ்ச்சியை முத்துக்கிருஷ்ணன், வினோத் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இதைப்பற்றி SWOTT பொருளாளர் தமீமுல் அன்சாரி அவர்களிடம் கேட்டதற்கு, ” நாங்கள் சிறு வயதில் படிக்கும் பொழுது காவாங்கரை பகுதி பசுமை பூங்காவாக இருந்தது. இன்று மக்கள் வளர வளர காட்டிடங்களாக மாறிவிட்டன. மரங்கள் இல்லாமல் போய்விட்டன. இதை மாற்றும் விதமாக. SWOTT சார்பாக 500 மரங்கள் நடும் திட்டத்தை பகுதி இளைஞர்கள் மூலமாக செயல் பட தொடங்கி வைத்து உள்ளோம். மிக விரைவில் மழைக்காலங்கள் வருவதால், அதன் பயனாக அடுத்த வருடத்திற்குள் இந்த பகுதியை சுற்றி பசுமையாக மாற்ற கூடிய வேலைகளை சிறப்பாக செய்வோம். நீரை தரையில் தேடாமல் வானில் இருந்து வரவைக்கும் நோக்கோடு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்றார்.
செங்குன்றம், செய்தியாளர் – நண்பன், எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777