Sat. Sep 26th, 2020

பெரியபாளையம் அருகே, நெய்வேலி கிராமத்தில், சோலையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் 79 நெய்வேலி கிராமத்தில் ,100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சோலையம்மன் கோயில் உள்ளது. அங்கு சோலை அம்மனின் சிலையை வைத்து கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில், நெய்வேலி கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அந்த கோயிலை, தங்களால் முடிந்த உதவிகளை செய்து, புதியதாக சோலையம்மன் ஆலயத்தைக் கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த ஏழாம் தேதியன்று பந்தக்கால் நடப்பட்டது. அம்மனுக்கு நாள் தோறும் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை சோலையம்மன் மற்றும் சப்த கன்னியர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி பூர்ணாஹுதி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டு பின்னர் 10 மணி அளவில் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்களை புரோகிதர்கள் எடுத்து வரும் கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து 10.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரை கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது ஊற்றி மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெய்வேலி கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

கும்மிடிப்பூண்டி, செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *