Sat. Sep 26th, 2020

மாதவரத்தில், அமைச்சர்கள் முன்னிலையில், அதிமுகவில் 1000 பேர் இணைந்தனர்…

1 min read

மாதவரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அமைச்சர்கள் பெஞ்சமின், மற்றும் மாபா. பாண்டியராஜன் முன்னிலையில், மாதவரம் வி. மூர்த்தி தலைமையில் 1000 இளைஞர்கள் அதிமுகவில் சேர்ந்தனர். மாதவரத்தில், அதிமுக வின், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
அலுவலக திறப்பு விழாவும், அக்கட்சி கொடி ஏற்றுதல் விழாவும், இளைஞர் இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கும் முகாமும், ஆகிய நிகழ்ச்சிகளை ஒன்றாக சேர்த்து, முப்பெரும் விழாவாக திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது .

மேலும் மாவட்ட பிரதிநிதி மூ.கண்ணதாசன் ஏற்பாட்டில் மாதவரம் பஜாரில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் அமமுக, திமுக, போன்ற கட்சியிலிருந்து விலகி கழகத்தில் ஊரக தொழில் துறை அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் மாஃபா க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான மாதவரம் வீ.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர்கள் உறுப்பினர் படிவம் வழங்கி சால்வை அணிவித்து வரவேற்றனர்.

மாதவரம்,
செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *