மாதவரம் கொசப்பூர் டோல்கேட்டில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்…
1 min read

கொரானோ நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாதவரம் கொசப்பூர் டோல்கேட் பகுதியில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இதில் மாதவரம் பால்பண்ணை காவல் ஆய்வாளர் ஆனந்தன் உதவி ஆய்வாளர் சதீஸ் மற்றும் போலீசார் பொதுமக்களுக்கும், இருசக்கர ஓட்டிகளுக்கும் மற்றும் ஆட்டோ கனரக வாகனங்கள் ஆகிய ஓட்டுனர்களுக்கும்
முககவசம் அணிவதன் அவசியத்தை எடுத்து கூறி, முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, முககவசத்தை போலிசார் வழங்கி, அறிவுரைகளையும் வழங்கினர்.

பொதுமக்கள், கட்டாயமாக வெளியில் செல்லும் போதும் மார்க்கெட் சந்தைகள், கடைகள், மால்கள் செல்லும் போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். எனவும், கட்டாயமாக முககவசம் அணிந்தால் தான் நோய்த் தடுப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியும் எனவும், வீட்டிற்கு செல்லும் முன் கைகளை சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அறிவுரை வழங்கினார்கள்.
மாதவரம் செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777
