Sat. Sep 26th, 2020

மாதவரம் பகுதியில், கோயில் அர்ச்சகர்களுக்கு, திமுகவினர் நிவாரணம் உதவிகள் வழங்கினர்…

1 min read

சென்னை வடக்கு மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் பணியாற்றும் குருக்கள் மற்றும் பூசாரிகளுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாதவரம், மஞ்சம்பாக்கம், மாத்தூர், எம்எம்டிஏ, கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், பகுதிகளில் அமைந்துள்ள சிவன், ககாளியம்மன் , சர்வசக்தி மாரியம்மன் ,வெங்கடேசப்பெருமாள் கோவில், எல்லையம்மன் கோயில், கன்னியம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த 5 மாதங்களாக கொரோனா பரவலை தடுக்க வேண்டி, அரசு பக்தர்களை அனுமதிக்காததால், பக்தர்கள் வருகையின்றி கோவில் அர்ச்சகர்கள், மற்றும் குருக்கள், கோயில் ஊழியர்கள் வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டனர்.

இதனையறிந்த, திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் அரிசி, கோதுமை மாவு, உள்ளிட்ட மளிகை பொருட்களை , கோயில்களில் பணிபுரியும் பூசாரிகள், மற்றும் குருக்களுக்கு வழங்கினார்.
கோயில்கள் அமைந்துள்ள இடங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு பணிபுரியும் குருக்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மாதவரம் வடக்குப் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் அஜய் நாராயணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி உதயகுமார் மலர்மன்னன் எஸ் எஸ் கே செல்வகுமார் லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாதவரம்
செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *