செங்குன்றத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டம்…
1 min read

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் செங்குன்றத்தில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பதினைந்தாம் ஆண்டு துவக்க விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் செங்குன்றத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி பாபு ராவ் தலைமை தாங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குள் கேப்டன் அவர்கள் பூரண நலம் வேண்டி கோவில்களில் பிரார்த்தனை செய்வது, 15ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கிளைக் கழகங்களில் கல்வெட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்குதல், அனைத்து ஒன்றிய நகர பகுதிகளில் கிளைக் கழகங்கள் வார்டுகள் வட்ட செயலாளர்கள் பதவி நியமிப்பது மேலும் தேமுதிக வளர்ச்சி அடைய புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது போன்ற 5 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் ஆட்டந்தாங்கல் கே. எம்.டில்லி அவர்கள் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னதாக, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளையும் பகுதி ஒன்றிய நகர கழக செயலாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எஸ்பிடி. மூ ராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர்கள் எஸ். பி.ரமேஷ் ஆர்.டி.விஜயபிரசாத்டி. கண்ணதாசன் கேப்டன் மன்ற செயலாளர் வி.எல் பாபு இளைஞரணி செயலாளர் ராம்குமார் மகளிர் அணி செயலாளர் ஆர்த்தி செல்வகுமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய நகர பகுதி செயலாளர்களிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை மாவட்ட செயலாளர் கே.எம்.டில்லி வழங்கினார்.
மாதவரம், செய்தியாளர்- ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777
