சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கம் சார்பாக, நல்லாசிரியர் விருது வழங்கும் விழா…
1 min read

மாவட்ட ஆளுநர் டி.ராஜபாண்டியன் விழாவை துவக்கி வைத்து விருதுகளை வழங்கினார். முதல் துணை ஆளுநர் ஆர்.ஸ்ரீதரன், இரண்டாம் துணை ஆளுநர் பி.வி.ரவீந்திரன், முன்னாள் ஆளுநர் டி.துளசிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உறுப்பினர் சேர்க்கையின் மாவட்டத் தலைவர் இரா.ஏ.பாபு ஆசிரியர் தின உரையாற்றினார்.


அமைச்சரவை பொருளாளர் கே.சீனிவாசன், துணைச் செயலாளர் சி.பாலாஜி, மண்டலத் தலைவர் ஜி.வடிவேலன், வட்டாரத் தலைவர் சி.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் கே.பாஸ்கர் நன்றி நவின்றார். இந்நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் பி.பி. சுகுமார், பி.கோதண்டபாணி, ஆர்.வி. உதயகுமார், மூர்த்தி, ஆர்.செல்வக்குமார், என்.சந்திரசேகர், டி.ரமேஷ், ராஜ், எஸ்.கோபி, பாஸ்கர், பி.கணேசன், என். கணேசன், நந்தகுமார், ஆர்.சுரேஷ், ஏவிஎன். தேவன், பாலசுப்பிரமணி, எம்.ஆடலரசன், ஷ்யாம் சுந்தர், பாலாஜி, ராஜேஷ் கண்ணா, பிஎஸ்வி. திருநாவுக்கரசு, முனிவேல், எம்.சேகர், பி.எல்.சரவணன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் பூபால முருகன், இம்மானுவேல் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செங்குன்றம், செய்தியாளர் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
