Mon. Sep 28th, 2020

செங்குன்றம் அருகே, புள்ளிலைன் ஊராட்சியில், கொரோனா தொற்று பற்றிய கணக்கெடுப்பு பணி நடத்தபட்டது…

1 min read

கொரோனா தொற்று பரவாமல் அறிகுறிகளான, காய்ச்சல், சளி உள்ளிட்டவைகள் நோய்கள் உள்ளனவா என ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று கணக்கெடுப்பு செய்யும் பணி, புள்ளிலைன் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச் செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டயானா, செங்குன்றம் குறுவட்ட வருவாய் அலுவலர் ஜெய்கர் பிரபு ஆகியோர் கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன், புள்ளிலைன் ஊராட்சி செயலாளர் இனியவன், ஒருங்கிணைப்பாளர் பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செங்குன்றம் செய்தியாளர் – நண்பன், எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *