Mon. Sep 28th, 2020

கும்மிடிப்பூண்டி அருகே மேல்பாக்கத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா…

1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, மேல்பாக்கம் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை பாஜகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேல்பாக்கம் பகுதியில் பாஜக மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சுதாகர், மாவட்ட செயலாளர் காஞ்சனா, ஒன்றிய பொது செயலாளர் உமா மகேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அணி நிர்வாகிகள் சீனிவாசன், இளங்கோ, ஜான்தியாப்லஸ், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய தலைவர் ஜம்புலிங்கம், பாஜக நிர்வாகிகள் வேந்தன்,சந்தோஷ்பாபு முன்னிலை வகித்தனர். இந்த பிறந்த நாள் விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் எஸ்.ராஜா பங்கேற்றார். தொடர்ந்து பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி அவரது நலனிற்காகவும், நாட்டின் நலனிற்காகவும், மேல்பாக்கம் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மேல்பாக்கத்தில் பிரதமர் மோடி பிறந்தநாளை ஒட்டி அமைக்கப்பட்ட கொடிகம்பத்தின் கல்வெட்டை மாவட்ட தலைவர் எஸ்.ராஜா திறந்து வைத்து, கட்சி கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மேல்பாக்கம், ஈகுவார்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதே போல நிகழ்வில் 70 பயனாளிகளுக்கு பாரத பிரதமரின் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை பெறும் வகையிலான காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு பாஜக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்ட பாஜகவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *