செங்குன்றத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, இரத்ததான முகாம்…
1 min read

செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ரெட்ஹில்ஸ் வண்டிமேடு கிளை மற்றும் கே.எம்.சி. அரசு மருத்துவமனை சார்பில், இரத்ததான முகாம் மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்தாப் தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் கலந்து கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்தனர். பின்னர் இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து இரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் ஷேக்முஹைதீன், கிளை தலைவர் அப்துல்அஜிஸ், செயலாளர் நூர்தீன், பொருலாளர் சாதிக்உசேன், கிளை துணை தலைவர் முகமதுஅலி, கிளை மருத்துவரணி செயலாளர் சமியுல்லாஹ், மற்றும் காவாங்கரை கிளைஅஸாருதீன் ஆகிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் குர்ஆன் மற்றும் முகக்கவசம் வழங்கினர்.
செங்குன்றம் செய்தியாளர் – நண்பன், எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777