செங்குன்றம், காமாட்சி அம்மன் கோவிலில், காவலாளியை தாக்கி, கொள்ளை…
1 min read

செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சிக்குட்பட்ட பைபாஸ் சாலையில், காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் காவலாளி முருகன் (66) நேற்றிரவு கோயிலில் காவல் பணியில் இருந்தார். அப்போது 3 பேர் ஆயுதங்களுடன் கோயிலுக்குள் நுழைந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை தலை மற்றும் உடலில் வெட்டி விட்டு, கோயிலிருந்து பித்தளை பாத்திரங்கள், உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கைகளையும் கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.

இன்று அதிகாலை கோயில் வழியாக சென்றவர்கள், காவலாளி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவலாளி முருகனை மீட்டு பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி, முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் புழல் சரக உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர் பீட்டர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தியாளர் -ரெட்ஹில்ஸ் நண்பன், எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
