சென்னை கொரட்டூர் ஏரியில், தொடர்ந்து மரங்கள் நடும் சமூக ஆர்வலர்களுக்கு, அரசு அதிகாரிகள் பாராட்டு…
1 min read

சென்னை கொரட்டூர் ஏரியில், SWOTT அமைப்பின் சார்பில், 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மரம் நடும் விழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து KAPMI அமைப்பினர் சார்பாக, ஆயிரம் பனை விதைகள் மற்றும் அலையன்ஸ் FLATS சார்பாக கோரட்டுர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அதன் தொடர்ச்சியாக நமது SWOTT தன்னார்வலர்கள் அன்பு வேண்டுகோளினை ஏற்று, இன்று இந்திய தேசிய வணிக மற்றும் சேவை துறையின் ஆணையர் (நேஷனல் ஜிஎஸ்டி கமிஷனர்) P.ஆனந்த் குமார்.IRS அவர்கள் கொரட்டூர் ஏரியில் தொடர்ந்து மரங்களை நட்டு கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களை அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக , GST குழுவினருடன் நேரடியாக வந்து மரக்கன்றுகளை நடவு செய்து, SWOTT குழுவினருக்கு உற்சாகமூட்டும் வகையில், “அரசும், அரசு துறை அதிகாரிகளும் இணைந்து, இது போன்ற சமூக அக்கறை உள்ள இயற்கை சார்ந்த செயல்களை செய்வது நம் அனைவருக்கும் நல்லது, அவர்களுக்கு எங்களுடைய ஆதரவும், ஒத்துழைப்பும் என்றும் உண்டு” என்று பேசினார்.

அவருடன் மத்திய வணிகவரி துறை (GST துறை) சார்ந்த 25 க்கும் மேற்பட்ட உயர்அதிகாரிகள், தமிழக பொதுப்பணி துறை அதிகாரிகள், ஊடக துறை நண்பர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை
SWOTT கொரட்டூர் ஏரி ஒருங்கிணைப்பாளர்
சினேகாசீனிவாசன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சமீர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
இந்த சிறப்பு நிகழ்வில், SWOTT குழுவின் தலைவர் MFG.G பாலாஜி அவர்கள் மற்றும் தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் SWOTT குழுவின் திட்ட ஆலோசகருமான பொறியாளர்.தனுவேல்ராஜ் முத்துக்காத்தன் அவர்கள், மற்றும் SWOTT தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செங்குன்றம் செய்தியாளர் – நண்பன், எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
