சோழவரம் ஒன்றியம், திருநிலை ஊராட்சியில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு பரிசோதனை முகாம் நடத்தபட்டது…
1 min read

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை ஊராட்சியில், கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம் திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவக்குமார் தலைமையில் நடை பெற்றது.
இந்த முகாமில், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனசேகர், கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார் ஆகியோர் முன்னிலையில் பூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இசக்கிபிரசாத் மற்றும் மருத்துவ குழுவினர்கள் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் தடுப்பு பரிசோதனை செய்தனர்.

பின்னர் கொரோனா வைரஸ் பரவாமல் எவ்வாறு தடுப்பது குறித்து மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளைகூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத்தொடர்ந்து ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு மூலிகைகள் நிறைந்துள்ள கபசுரக் குடிநீரை வழங்கினர். இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆஷா பிரதாபன், ரேவதி ஜான்சன், பிரகதி வின்னரசு, பூபதி, கவிதா வெங்கடேசன் மற்றும் ஊராட்சி செயலர் சௌமியா ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
செங்குன்றம் செய்தியாளர்,
நண்பன், எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
