Fri. Sep 25th, 2020

பெரிய பாளையத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்க விழாவில், ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கபட்டது…

1 min read

பெரியபாளையத்தில் நடந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்க 34ஆம் அமைப்பு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதிய கல்வெட்டு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சி, வட்டார கிளை தலைவர் குமரவேல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் காந்திமதிநாதன் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, கல்வெட்டை திறந்து வைத்து சங்கத்தின் கொடியேற்றி வைத்தனர்.

மேலும் அனைத்து ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணங்களையும், நலத்திட்டங்களையும், வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் சந்தானம் மாவட்ட பொருளாளர் மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் மெல்கிராஜாசிங், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், வட்ட கிளை பொருளாளர் குமார், வட்ட கிளை நிர்வாகிகள் மதன், பொன்னரசு மோகன்ராஜ் சரவணன் பாபு காந்தாராவ் உமாநாத் ஏகாம்பரம் செல்வம் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிபூண்டி செய்தியாளர் சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *