வடகரை ஊராட்சியில், குடிநீருக்காக ஆழ்துளைக் கிணறு, அமைக்கும் பணிக்கான பூமி பூஜை…
1 min read

புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகரை ஊராட்சிக்கு குடிநீர் வசதிக்காக திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர் ஆலோசனையின் பேரில், மாவட்ட கவுன்சிலர் மோரை மு.சதீஷ்குமார் மாவட்ட மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புழல் ஒன்றிய திமுக செயலாளர் நா.ஜெகதீசன் மேற்பார்வையில், புழல் ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கமணி திருமால் தலைமையில், ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் ஏற்பாட்டில், வடகரை சாலை சந்திப்பில் மாவட்ட கவுன்சிலர் மோரை மு.சதீஷ்குமார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வி.திருமால், திராவிட டில்லி, புள்ளிலைன் ஊராட்சி கழகச் செயலாளர் ஜி.தினேஷ் மற்றும் பொதுமக்கள், அரசு அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்- செங்குன்றம் நண்பன், எம். அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777


அருமந்தை ஊராட்சியில், புதிய குடிநீர் மோட்டார் அமைக்கும் பணி துவக்கம்…
செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அருமந்தை ஊராட்சியில், பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்வுகாண உடனடி நடவடிக்கையாக, அருமந்தை குடியிருப்பு மற்றும் பஜார் பகுதியில் புதிய குடிநீர் மின் மோட்டார் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் சி.விக்ரமன் தலைமையில் நடை பெற்றது.
இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி, லட்சுமி, பன்னீர்செல்வம், பாலு, விஜயா மற்றும் சமூக ஆர்வலர்கள் தாமோதரன், நீலமேகன், தசரதன், கோதண்டன், மோகன், நாகராஜ், கருணாகரன், மகேந்திரன், அரங்கணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் – செங்குன்றம் நண்பன், எம்.அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
