விவசாய கடனுக்கான தவணை கேட்டு, தகாத முறையில் கீழ் தரமாக பேசிய வங்கி அதிகாரி மீது, விவசாயி போலீஸில், புகார்…
1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஜி.தட்சிணாமூர்த்தி. இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் விவசாய கடனாக ரூபாய் 8,70,000 வாங்கியுள்ளார்.6 மாதத்திற்கு ஒரு முறை 60 ஆயிரம் ரூபாய் இவர் தவணை தொகையை கட்ட வேண்டி இருந்தது. இந்நிலையில் முதல் தவணை ஏப்ரல் மாதத்தில் கட்டவேண்டிய நிலையில், கொரோனா தொற்று காரணமாக வங்கிகள் செயல்படாத நிலையில் தட்சிணாமூர்த்தி தவணையை செலுத்தவில்லை.

இந்நிலையில் வியாழன் அன்று விவசாயி தட்சிணாமூர்த்தியின் வீட்டிற்கு, வங்கி ஊழியர் ஒருவர் சென்று தவணை தொகையை கேட்டுள்ளார். அதற்கு தட்சிணாமூர்த்தி நெற்பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை முடிவடையும் நேரம் என்பதால், இந்த மாதத்திற்குள் தவணையை கட்டி விடுவதாக உறுதியளித்தார். அதற்க்கு, அங்கு வந்திருந்த வங்கி ஊழியர், ” சென்னையில் உள்ள வங்கி தலைமை அலுவலத்தில் இருந்து வினோத் என்கிற அதிகாரி பேசுவதாக ” கூறி, செல்போனை தட்சிணாமூர்த்தியிடம் தந்துள்ளார். அதை தொடர்ந்து, அவரிடம் தட்சிணாமூர்த்தி பேசுகையில், வினோத் என்கிற அந்த அதிகாரி தட்சிணாமூர்த்தியிடம் அநாகரீகமாக பேசி உள்ளார். தான் வயதான நபர் வயதிற்காகவது மரியாதை தாருங்கள் என தட்சிணாமூர்த்தி கேட்டுக் கொண்டும் அந்த அதிகாரி தட்சிணாமூர்த்தியை மிரட்டியும், அவமரியாதையாக பேசியும், ” இன்றே கடன் தவணையை கட்டுமாறு” வலியுறுத்தியுள்ளார்.

அதனால், அவமானத்துடனும்,
மன உளைச்சலிலும், தட்சிணாமூர்த்தி தவித்த நிலையில் வெள்ளியன்று அதே வினோத் என்கிற வங்கி அதிகாரி தட்சிணாமூர்த்திக்கு போன் செய்து, “இன்றுக்குள் தவணையை கட்டாவிட்டால் போனில் பேசமாட்டேன் ஆட்களை வீட்டிற்கு அனுப்பி அசிங்கப்படுத்துவேன்” என மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தட்சிணாமூர்த்தி, வினோத் என்கிற ஆக்சிஸ் வங்கி அதிகாரி, தன்னை தரக்குறைவாக பேசி, மிரட்டியது குறித்து, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில், வங்கிகள் கடன் தவணையை வராக்கடன் பட்டியலில் சேர்க்க கூடாது எனவும், கடன் தவணையை வசூலிக்க கடன் பெற்றவர்களின் வீட்டிற்கு வங்கியில் இருந்து யாரும் செல்லக்கூடாது. எனவும், உச்சநீதிமன்றம் எச்சரித்தும் அதனை மீறி கும்மிடிப்பூண்டியில் ஆக்சிஸ் வங்கி செயல்பட்ட நிலையில் வினோத் என்கிற வங்கி அதிகாரி நடந்துக் கொண்ட விதம் கும்மிடிப்பூண்டியில் வங்கி வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நிழல்.இன் – 8939476777