ஆத்தூர் ஊராட்சியில், கொரோனா அறிகுறியான காய்ச்சல், சளி கணக்கெடுப்பு பணி நடத்தபட்டது…
1 min read
சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில்
கொரோனா தொற்று பரவாமல் இருக்க காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்கள் அறிகுறிகள் உள்ளனவா, என ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று கணக்கெடுக்கும் பணி ஆத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சற்குணன் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சுமதி கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தார்.
இதில், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், ஆத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் லதா சீனிவாசன், வார்டு உறுப்பினர்கள் தேன்மொழி விஜி, கமலா முருகன், நதியா கார்த்திக், மனிஷா பாண்டியராஜன், பிரபு, சர்மிளாதேவி செந்தில், சீனிவாசன், ராதிகா துளசிராமன் மற்றும் ஊராட்சி செயலர் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் – செங்குன்றம், நண்பன் அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
