Thu. Sep 24th, 2020

கொளத்தூர் தனியார் பள்ளியில், காணொளி காட்சி வகுப்பில், உலக அறிவை சொல்லி கொடுத்து அசத்தும் ஆசிரியர்கள்….

1 min read

ஊரடங்கால் கடந்த ஆறு மாதங்களாக பள்ளிகள் மூடி இருக்கும் நிலையில், தற்போது அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் மனஅழுத்திற்கு ஆளாகின்றனர். என்ற குற்றசாட்டு எழுந்து வரும் நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ பாலாஜி மெட்ரிகுலேஷன் பள்ளியில், காணொளி காட்சி வகுப்புகளில், பள்ளிப் பாடங்களை மட்டுமல்லாது புத்தியை கூர்மையாக்கும் விளையாட்டுகள், கவனங்களை சிதற விடாமல் உற்று நோக்குதல் பயிற்சி, மூளை வளர்ச்சிக்கான பயிற்சி, இடது கையால் எழுதும் பயிற்சி, அறிவியல், விஞ்ஞானம், கலந்த உண்மை கதைகள், கீரைகள் அதன் பயன்கள், புத்தகம் வாசித்தல், போன்ற அடிப்படை அறிவுகளையும் பாடங்களாக சொல்லிக் கொடுத்து மாணவர்களுக்கு வெளியுலகை அறியும் வண்ணம் வகுப்புகள் எடுத்து அசத்தி வருகின்றனர்.

இந்த விதமான பயிற்சிகள், மாணவர்களை புத்துணர்ச்சி ஆக்குவதுடன் பாடங்களையும் எளிதாக கற்க வழிவகை செய்கிறது. மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மாதவரம், செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *