November 27, 2020

சென்னை அருகே, புழல் நீட் தேர்வு மையத்தில், 600 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்…

1 min read

பலத்த எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இன்று நீட் தேர்வு நடைபெறுவதை தொடர்ந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சென்னையை சுற்றியள்ள புறநகர் பகுதிகளில் இருந்தும், சென்னை புழல் ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளியில், நீட் தேர்வு எழுதவதற்காக வந்த மாணவியர்கள் 388 பேரும், மாணவர் 212 பேரும் தேர்வு எழுத தயாராக அவர்கள் பெற்றோருடன் வந்து இருந்தனர்.

அவர்களை காலை 11 மணி அளவில் தேர்வு மையத்துக்கு பலத்த சோதனைக்கு இடையே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களுக்கு ஆதார் கார்டு, நுழைவு சீட்டு, மற்றும் தண்ணீர் பாட்டில், ஆகியவை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.
எழுதப் பயன்படும் பேனா, மற்றும் பென்சில், ரப்பர்களை, தேர்வு மையத்தின் உள்ளே அனுமதிக்கும் போது அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

மாதவரம் புழல் பகுதியில் லேசான தூறல் மழை பெய்து வருவதால் குடை பிடித்த படியே பெற்றோர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். மேலும் 600 மாணவர்கள் நீட் தேர்வு எழுத வந்துள்ளதால், மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் புழல் சரக உதவி ஆணையர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் செங்குன்றம் குற்றப்பிரிவு ஆய்வாளர் வசந்தன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபடுத்தபட்டனர்.

மாதவரம், செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *