புழலில், குடும்ப தகராறில், கை குழந்தையுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை…
1 min read
செங்குன்றம் அடுத்த புழலில்
ஒன்னரை வயது கை குழந்தையுடன், தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழல், கன்னடபாளையம் ஜீவா தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் அவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பாக்கியலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மித்ரன் என்ற ஒன்னரை வயது ஆண் குழந்தை இருந்தது. கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வேலை சென்றுவிட்டு மாலை வீட்டிற்க்கு வந்த ரஞ்சித்தின் தாயார் சாந்தி, நீண்ட நேரமாக கதவை தட்டியும் பாக்கியலட்சுமி கதவை திறக்காததால், தமது மகன் ரஞ்சித்குமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, குழந்தையுடன் தாய் பாக்கியலட்சுமி தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கிட்ட நிலையில் இருந்த தாய், குழந்தை இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் ரஞ்சித்குமார் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்னரை வயது கை குழந்தையுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம், செய்தியாளர் – ரஞ்சித்
நிழல்.இன் – 8939476777
