Sat. Sep 26th, 2020

கும்முடிபூண்டியில், உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு, தொழிற்சாலை முன்பு ஆர்பாட்டம் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர்…

1 min read

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில், உள்ளூர் மக்களுக்கு வேலைதர கோரி அப்பகுதியில் உள்ள சூர்யதேவ் என்கிற தனியார் இரும்பு உருக்காலை முன்பு ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர், அஷ்வினி சுகுமாறன் தலைமையில் பொதுமக்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில், உள்ள சூர்யதேவ் என்கிற தனியார் இரும்பு உருக்காலை கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் எப்போதும், உள்ளூர் மக்களுக்கு வேலை தரவில்லை, என்கிற அதிருப்தி நெடு நாட்களாக அப்பகுதி மக்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன் தலைமையில் துணை தலைவர் எம்.எல்லப்பன் முன்னிலையில் ஊராட்சி மக்கள் மேற்கண்ட தொழிற்சாலையை முற்றுகையிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து, தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் ஆர்பாட்டம் நடத்தியவர்ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர், அஷ்வினிசுகுமார் “புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த, பொறியியல் பட்டதாரிகள், தொழில்நுட்ப பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என, படித்தவர்களுக்கு படிப்பிற்கேற்ற வேலையும், மற்றவர்களுக்கு அவர்கள் திறமைக்கேற்ற வேலையும் வழங்க வேண்டும்” என கோரிக்கை வத்தார். அதனை தொடர்ந்து, தொழிற்சாலை நிர்வாகத்தினர், “இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளூர் மக்களுக்கு பணிகள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என, உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் – சுடர்மதி, நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *