November 27, 2020

கும்முடிபூண்டியில், நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு உதவிய காவலருக்கு, எம்எல்ஏ பாரட்டி பரிசளிப்பு…

1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் நீட் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்த மௌனிகா(17) என்ற மாணவி வீட்டில் மறந்து வைத்து வந்த ஆதார் அட்டையை கொண்டு வந்து உதவிய காவலர் மகேஷ்வரனுக்கு எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் திங்களன்று பாராட்டி பரிசளித்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு நடந்த நீட் தேர்வில், 335 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத வந்தனர். அப்போது சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த, மயிலாப்பூர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி மௌனிகா(17) நீட் தேர்வுக்காக வந்தார். அப்போது மாணவி மௌனிகா, அசல் ஆதார் அட்டையை கொண்டு வராமல் நகலை மட்டும் கொண்டு வந்தார். இதனால் தேர்வறைக்கு செல்ல முடியாத நிலையில், மாணவி மௌனிகா மற்றும் அவரது தாய் ஷீலா இருவரும் என்ன செய்வது என தெரியாமல், பதறினர். அதை கேள்விபட்ட, அங்கு பாதுகாப்பு மேற்பார்வை பணியில் ஈடுபட்டு இருந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் மாணவியிடம் விபரம் கேட்டு விசாரித்தார். மாணவி அழுதபடி ஆதார் அட்டையை கொண்டு வராததை பற்றி கூறினார். தேர்வு நடக்க 2 மணி நேரம் இருந்த சூழலில், டிஎஸ்பி ரமேஷ் பாதுகாப்பு பணியில் இருந்த ஆரம்பாக்கம் காவல் நிலைய காவலர் மகேஷ்வரனை(24) மாணவியின் தாய் ஷீலாவோடு அனுப்பி அவரது வீட்டில் இருந்து ஆதார் அட்டையை கொண்டு வரச்சொன்னார்.

இதனிடையில், டிஎஸ்பி ரமேஷ் மாணவி மௌனிகவை ஆசுவாசப்படுத்தி அவரை தேர்வு குறித்து மட்டும் கவனமாக இருக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து காவலர் மகேஷ்வரன் ஒன்றரை மணி நேரத்தில் மாணவி மௌனிகாவின் வீட்டிற்கு சென்று ஆதார் அட்டையை கொண்டு வந்தார். அதை டிஎஸ்பி ரமேஷ் மாணவியிடம் வழங்கி, தைரியப்படுத்தி மாணவியை தேர்வு எழுத அனுப்பி வைத்தார். தேர்வு துவங்க 15 நிமிடம் இருந்த நிலையில் தேர்வு அறைக்கு சென்று மாணவி மெளனிகா தேர்வு எழுதினார். மேலும் தேர்வு முடிந்ததும் டிஎஸ்பி ரமேஷ் உத்தரவின் பேரில், காவலர் மகேஷ்வரன் மாணவி மௌனிகாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வந்தார்.

இந்த சம்பவம் அறிந்து, திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் டிஎஸ்பி ரமேஷ் மற்றும் காவலர் மகேஷ்வரனை பாராட்டினர். இந்த சூழலில் இது குறித்து அறிந்த, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் இன்று
கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்து, டிஎஸ்பி ரமேஷ் மற்றும் காவலர் மகேஷ்வரனை பாராட்டினார். தொடர்ந்து காவலர் மகேஷ்வரனுக்கு எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் விலையுயர்ந்த கைகடிகாரத்தை பரிசளித்தார். மேலும் காவலர் மகேஷ்வரனுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்வில் டிஎஸ்பி ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் கதிர்வேல், வெங்கடாசலபதி, அதிமுக நகர செயலாளர் மு.க.சேகர், ஒன்றிய நிர்வாகி டி.சி.மகேந்திரன், எம்.எஸ்.எஸ்.சரவணன்,ஓடை ராஜேந்திரன், விஸ்வநாதன் பங்கேற்றனர்.

செய்திகள், சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *