November 27, 2020

கும்முடிபூண்டியில், பட்டப்பகலில் வீடு புகுந்து 14 சவரன் நகை திருட்டு…

1 min read

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில், இன்று வீட்டின் பக்கத்தில் இருந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருள் வாங்கி வருவதற்குள் மர்ம நபர்கள் 14 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (58). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி ஷாபிரா. இவர் வீட்டில் பக்கத்தில் செயல்பட்டு வந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டின் வெளிக்கதவை தாழ்பாள் போட்டு ரேஷன் கடைக்கு சென்று 10 நிமிடம் கழித்து வீட்டிற்க்கு வந்து வீட்டிற்குள் சென்ற போது, வீட்டின் உள் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ந்து போன ஷாபிரா, பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகை திருடு போனது அறிந்து திடுக்கிட்டார். இதுகுறித்து, ஷாபிராவின் கணவர் அன்சாரி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள், சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *