கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழாக்கள்…
1 min read
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை தாங்கி அண்ணா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் பகலவன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் தேவேந்திரன், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார்,ஒன்றிய துணை செயலாளர் திருமலை, கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம்,திமுக தொண்டர் அணி நிர்வாகி முத்துகுமார், மருத்துவ அணி நிர்வாகி ஆகாஷ், வர்த்தக அணி நிர்வாகி ஞானம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், ஜெயந்தி பங்கேற்றனர்.


அதே போல், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி பஜாரில், ஒன்றிய செயலாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அந் நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் பகலவன், பொதுக்குழு உறுப்பினர் பா.சே.குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை,பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், நகர செயலாளர் அறிவழகன், தலைமை கழக பேச்சாளர் தமிழ் சாதிக், திமுக நிர்வாகிகள் கருணாகரன்,ரமேஷ்,முன்னாள் பேரூராட்சி தலைவர் பாஸ்கர் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் தலைமையில் ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் திமுக நிர்வாகிகள் மனோகரன், வாசு, ரவி, அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777
