திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்வுகள்…
1 min read
பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதில் மாவட்ட செயலாளர் ஆவடி, சா.மு.நாசர் அவர்கள் ஆவடி காமராஜர் நகரில் உள்ள அண்ணாசிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன், நகர செயலாளர் ராஜேந்திரன் அவைத் தலைவர் ருக்கு ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

செங்குன்றம் பேரூர், திமுக சார்பாக, நடந்த முப்பெரும் விழா… தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்தநாளையும், கழகம் துவங்கிய நாளையும் முப்பெரும் விழாவாக நடத்த, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆவடி சா.மு. நாசர் ஆணைக்கிணங்க, செங்குன்றம் பேரூர் திமுக சார்பாக பேரூர் கழகச் செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஜி.ராஜேந்திரன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்குன்றம் மார்க்கெட்டில் உள்ள பெரியார் சிலை, அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் கட்சி நிர்வாகிகள் இரா.ஏ.பாபு, ஏ.திராவிடமணி, ஆர்.டி.குமார், ஜெ.ரகுகுமார், என்.சந்திரசேகர், ஏ.கோபால், கே.சுந்தரம், பி.செல்வம், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் கார்த்திக் கோடீஸ்வரன், உள்ளிட்ட இளைஞரணி, மாணவரணி, வார்டு, உட்கிளை உள்ளிட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் – செங்குன்றம் நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777


திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி, சா.மு.நாசர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பாக, புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட காக்கா கண்டிகை பகுதியில் பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு திருவள்ளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி, D.ராமகிருஷ்ணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , கொடியை ஏற்றி, இனிப்புகள் மற்றும் சானிடைசர் வழங்கினார். அவருடன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் , ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

மேலும், திருவள்ளுர் தெற்கு மாவட்டம் முழுவதும், நடத்தப்பட்ட முப்பெரும் விழா நிகழ்வுகள்…





