Fri. Sep 25th, 2020

பொன்னேரியில், திருவள்ளுர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் நிகழ்வு…

1 min read

பொன்னேரியில், பேரறிஞர் அண்ணாவின் 112 பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன், அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், இனிப்புகளையும் வழங்கி கொண்டாடினார்.

இதில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், கவுன்சிலர் பானுபிரசாத், ஒன்றிய கழக செயலாளர் மோகன வடிவேல், நகர கழக செயலாளர் உபயதுல்லா, பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, பொன்னேரி பேரூர் முன்னாள் தலைவர் பா.சங்கர், பொன்னேரி ருரல் வங்கி தலைவர் செல்வகுமார், சலீம், வெற்றிவேல் ராமலிங்கம், கொண்டகரை அமிர்தலிங்கம், நாலூர் முத்துக்குமார், வெற்றி என்ற ராமமூர்த்தி, தொழிலதிபர். ஆர்.டி.எஸ் .ராமு, வழக்கறிஞர்கள் மீஞ்சூர். மாரி, பெரிய காவணம் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி என் .ஆர். கோபால் , பொன்னேரி ஸ்ரீதர்,நாகராஜ்,சம்பத், சவுக்கத்அலி, கந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *