November 27, 2020

பொன்னேரியில், நீட் தேர்வை எதிர்த்து, வாலிபர்கள், மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் (DYFI), மற்றும் இந்திய மாணவர் சங்கமும் (SFI) இணைந்து, நீட் தேர்வை எதிர்த்து,
அம்பேத்கர் சிலை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்க்கு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் D.மதன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் வசந்த், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், பொன்னேரி பகுதி செயலாளர் k.சதீஷ்குமார் , இந்திய மாணவர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஜெயக்குமார், ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாணவ, மாணவிகளின் உயிரை குடிக்கும் நீட்டை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும்,
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், புதிய கல்விக் கொள்கை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம்(SFI) இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *