Fri. Sep 25th, 2020

கொரோனா, சீனாவிற்க்கே திரும்ப போய்விட்டதோ…

1 min read

உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் கொரோனா, கடந்த ஆறுமாத காலமாக நமது இந்திய ஒன்றியத்தையே பிடித்து ஆட்டி படைத்து கொண்டு இருக்கும் நிலையில், நமது மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்தன.

அதனால், மக்கள் வாழ்வாதரத்தை இழந்து பறிதவிக்கும் நிலையை போக்க வேண்டி, முழு ஊரடங்கு உத்தரவை படி,படியாக குறைத்து கொண்ட நிலையில், தற்போது மாநில அரசு மக்கள் கொரோனா தொற்றை எதிர்த்து வாழ பழகிவிட்டதால், விழிப்புடன் முககவசம் அணிந்தும், சமூக இடைவேளியை கடைபிடித்தும், வெளியில் நடமாட வேண்டும் என்ற வழிகாட்டுதலுடன், தடை உத்தரவை முழுமையாக நீக்கி, பொது போக்குவரத்து வரை செயல்பட செய்துள்ளது.

அதனால், மக்கள் இப்போது வெளியில் சாதாரணமாக நடமாடி வருகின்றனர். அரசு சமூக இடைவேளியையும், முககவசம் அணிவதையும் கட்டாயபடுத்தி இருப்பதை காற்றில் பறக்கவிட்டு,விட்டு,
” ஏதோ.. கொரோனா தொற்று கப்பலேறி, மீண்டும் சீனாவிற்க்கே போய்விட்டது, அதனால் தான் அரசு தடை நீக்கிவிட்டது ” என்ற நினைப்பில் தற்போது நடமாடி வருகின்றனர்.

உதாரணத்திற்கு, தடை காலத்தில் மூடபட்டிருந்த கோயில்கள் எல்லாம் தற்போது திறக்கபட்டு உள்ள நிலையில், இன்று மாகவளி அம்மாவாசை என்பதால், நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபடுவது வழக்கம், ஆனால், பல கோயில்களில், தர்பணம் கொடுக்கும் நிகழ்விற்க்கு தடை நீடிப்பதால், இன்று பொன்னேரியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் வழக்கத்தை விட, வெளியூர்களில் இருந்தெல்லாம் இங்கு வந்து தர்பணம் கொடுக்க மக்கள் கூட்டம் கூடியதால், கோயில் தெருவில் நுழையவே முடியாத நிலை இருந்தது. அய்யர்கள் 10 பேருக்கும் மேல் குளக்கரையில் அமர்ந்து, பூஜை செய்து கொண்டிருந்தாலும், ஒவ்வொருவரிடமும் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்றதால், பலர் குளக்கரை படியில் கை, கால்களை கழுவிவிட்டு அதே இடத்தில், தங்கள் முன்னோர்களை நினைத்து தேங்காய் உடைத்து, வழிபட்டு விட்டு சென்றனர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *