Mon. Sep 28th, 2020

திருவள்ளுரில், மாவட்ட ஆட்சியரின் தடையை மீறி, தர்பணம் வழங்கிய அய்யர்களை கைது செய்யாது, ஏன்?

1 min read

உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் கொரோனா, கடந்த ஆறுமாத காலமாக நமது இந்திய ஒன்றியத்தையே பிடித்து ஆட்டி படைத்து கொண்டு இருக்கும் நிலையில், நமது மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்தன.

அதனால், மக்கள் வாழ்வாதரத்தை இழந்து பறிதவிக்கும் நிலையை போக்க வேண்டி, முழு ஊரடங்கு உத்தரவை படி,படியாக குறைத்து கொண்ட நிலையில், தற்போது மாநில அரசு மக்கள் கொரோனா தொற்றை எதிர்த்து வாழ பழகிவிட்டதால், விழிப்புடன் முககவசம் அணிந்தும், சமூக இடைவேளியை கடைபிடித்தும், வெளியில் நடமாட வேண்டும் என்ற வழிகாட்டுதலுடன், தடை உத்தரவை முழுமையாக நீக்கி, பொது போக்குவரத்து வரை செயல்பட செய்துள்ளது.

இந் நிலையில், கொரோனா தொற்று பரவல் திருவள்ளுர் மாவட்டத்தில் சிறிதும் குறையாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தி கொண்டு, திருவள்ளுர் வரதராஜ பெருமாள் கோயிலில் வழக்கம் போல், மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்விற்க்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து இருந்தார்.

ஆனால், அந்த உத்தரவை சிறிதும் மதிக்காமல் பல அய்யர்கள், காக்களுர் பகுதியில் உள்ள வினாயகர் கோயில் குளக்கரையில், உட்கார்ந்து பூஜைகள் செய்தனர். இந்த தகவல் மக்களுக்கு காட்டு தீ போல் பரவியதால், அங்கு ஆயிரகணக்கான மக்கள் சமூக இடைவெளி ஏதும் இன்றி, திரண்டதுடன் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றனர். மக்கள் அவசர நிலையில் இரணடு சக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமலோ, மூன்று பேர் பயணித்தாலோ, முககவசம் இல்லால் சென்றாலோ அபராதம் விதிக்கும், காவல் துறை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட, அய்யர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *