Sat. Oct 24th, 2020

திருவள்ளுர் மாவட்டத்தில், பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்…

1 min read

திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் பெரியாரின் 142 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

கவரப்பேட்டையில், உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற அய்யா பெரியார் அவர்களின், பிறந்தநாள் விழாவிற்கு, முன்னாள் எம்எல்ஏவும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான, கி.வேணு அவர்கள் பங்கேற்று, பெரியார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சரண்ராஜ், திமுக நிர்வாகிகள் மாரி,செல்வராஜ், பிரவீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதே போல கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பொன்னேரியில், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர், க.சுந்தரம் அவர்கள் பெரியார் சிலைக்கு, மாலை அணிவித்து, மலர் தூவி வணங்கினார். அவருடன் மாவட்ட துணை செயலாளர் கதிரவன், தமிழன் இளங்கோவன், ஜோதீஸ்வரன், தமிழ் உதயன், மீஞ்சூர் திருப்பதி, ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினர்.

பொன்னேரியில் உள்ள அய்யா, பெரியார் சிலைக்கு, பொன்னேரி திராவிடர் கழகத்தினர், மற்றும் பெரியார் திராவிட கழகத்தினரும் மாலை அணிவித்து, வணங்கி வீர வணக்கம் செலுத்தினர்.

இன்று திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் அவர்கள், பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். அந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு. ரவிச்சந்திரன் , ஒன்றிய செயலாளர்கள் எஸ். மகாலிங்கம் , மோ. ரமேஷ் , முன்னாள் நகரமன்ற முன்னாள் தலைவர் பொன் . பாண்டியன், ந. பிரசன்ன குமார் மற்றும் கழக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

செங்குன்றம் பேரூர் திமுக சார்பாக, தந்தை பெரியார் 142வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆவடி சா.மு. நாசர் ஆணைக்கிணங்க, செங்குன்றம் பேரூர் கழகச் செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான, ஜி.ராஜேந்திரன் தலைமையில்,
செங்குன்றம் மார்க்கெட்டில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் இரா.ஏ.பாபு, மாவட்டப் பிரதிநிதி ஏ.திராவிடமணி, புழல் ஒன்றிய துணைச் செயலாளர் ஆர்.டி.குமார், நகர அவைத்தலைவர் ஜெ.ரகுகுமார், துணைச் செயலாளர்கள் டி.அருள்தேவநேசன், எஸ்.முனீஸ்வரி சுகுமார், பொருளாளர் என்.சந்திரசேகர், மாவட்ட வர்த்தகர் அணி துணை செயலாளர் கார்த்திக், ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.கோபால், பி.செல்வம் உள்ளிட்ட இளைஞரணி, மாணவரணி, வார்டு, உட்கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும், திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திமுகாவின், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அவர்களின் ஆலோசனைப்படி, சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன் அவர்கள், தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இன்று, தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில், ஐயா தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ படத்தினை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செய்து, வணங்கினர்.

செய்தியாளர்கள் – சுடர்மதி, மகேஷ் , சீனிவாசன், அபுபக்கர் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *